யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சமரச முயற்சி? ராமதாசுடன் பாலு சந்திப்பு
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008   ( 11:51 IST )
பாமக நிறுவனர் ராமதாசை, திமுக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு சந்தித்துப் பேசினார். இரு கட்சிகள் இடையே மீண்டும் சமரசம் செய்து வைக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

விழுப்புரம் அருகே தைலாபுரத்தில் உள்ள ராமதாசின் வீட்டில் நேற்றிரவு இந்த சந்திப்பு நடந்ததாக, பாமக வட்டாரங்கள் தெரிவித்தன.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர் நலன் விஷயத்தில் இரு கட்சிகளும் இணைந்து போராட வேண்டும் என்று யோசனை முன் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து விட்டு திமுக கூட்டணியில் பாமக மீண்டும் இணைய வேண்டும் என்று ராமதாஸை டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியின் அனுமதியுடன் ராமதாசை டி.ஆர். பாலு சந்தித்து ஆலோசனை நடத்தியதாக, திமுக தரப்பில் கூறப்படுகிறது.

டி.ஆர்.பாலுவின் இந்த சமரச முயற்சி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக - பாமக கட்சிகள் மீண்டும் ஒன்றாகக் கை கோர்க்குமா என்ற எதிர்பார்ப்பை இந்த சந்திப்பு உண்டாக்கியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கும்பகோணம் நினைவு மண்டபம்: ஸ்டாலின் திறப்பு!
மின் வெட்டு: சர்வகட்சிக் கூட்டத்துக்கு சரத் யோசனை
நிவாரணப் பொருள்களை பார்வையிட்டார் கருணாநிதி
கருணாநிதி ராஜினாமாவா? சென்னையில் பரபரப்பு
வைகோ, கண்ணப்பன் விடுதலை!
துப்பாக்கிச்சூடு: போலீசாரை டிஸ்மிஸ் செய்ய திருமா வலியுறுத்தல்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...