யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கும்பகோணம் நினைவு மண்டபம்: ஸ்டாலின் திறப்பு!
கும்பகோணம் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008   ( 09:58 IST )
கும்பகோண தீவிபத்தில் பலியான குழந்தைகளின் நினைவாக கட்டப்பட்ட நினைவு மண்டபத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கடந்த 2004ம் ஆண்டு பள்ளி கும்பகோணம் பள்ளியில் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல்கருகி பலியாகினர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் நினைவாக ஆண்டுதோறும், அந்த பள்ளியில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக 'நினைவு மண்டபம்' அமைக்க வேண்டும் என்று குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்று, தமிழக அரசு ரூ.60 லட்சம் ஒதுக்கியது. குடந்தை பாலக்கரையில் 10 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது.

குடந்தை அரசு கவின் கல்லூரி சார்பில் 29.50 லட்சம் செலவில் நினைவுத்தூண், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் ரூ.30.50 லட்சம் செலவில் தியான மண்டபம், அலங்கார மின் விளக்குகள், பூங்கா, சுற்றுச்சுவர் ஆகியவையும் அமைக்கப்பட்டன.

இந்த நினைவு மண்டபத்தை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மின் வெட்டு: சர்வகட்சிக் கூட்டத்துக்கு சரத் யோசனை
நிவாரணப் பொருள்களை பார்வையிட்டார் கருணாநிதி
கருணாநிதி ராஜினாமாவா? சென்னையில் பரபரப்பு
வைகோ, கண்ணப்பன் விடுதலை!
துப்பாக்கிச்சூடு: போலீசாரை டிஸ்மிஸ் செய்ய திருமா வலியுறுத்தல்
இல‌ங்கை‌ பிரச்னை என்னால் மட்டும் தீராது : கருணா‌நி‌தி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...