யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மின் வெட்டு: சர்வகட்சிக் கூட்டத்துக்கு சரத் யோசனை
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008   ( 09:54 IST )
மின் பற்றாக்குறையை சமாளிக்க அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்று, தமிழக அரசுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் யோசனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க முடியாத நிலை உள்ளது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும், 70 ஆயிரம் தொழிலாளர்களுக்கு சம்பள இழப்பும் ஏற்பட்டலாம் என்று செய்தி வெளியாகியுள்ளது. இது கவலைக்குறியது.

அரசு வழங்கும் இலவசத் தொலைக்காட்சியால் 250 மெகாவாட் கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சார வாரியத்தினரே தெரிவித்துள்ளனர். தற்போது மேலும் 40 லட்சம் தொலைக்காட்சி வழங்க டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எங்கிருந்து மின்சாரம் கிடைக்கும்?.

தொழிற்சாலைகளுக்கான மின் தேவை எவ்வளவு, விவசாயத்துக்கு எவ்வளவு தேவை, விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தின் அளவு எவ்வளவு, வீடுகளுக்கான மின் தேவை எவ்வளவு, இவற்றில் நிலவும் பற்றாக்குறை எவ்வளவு உள்ளிட்ட விவரங்களையும் அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்னைக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது போல் தமிழக மின் பற்றாக்குறைக்கு தீர்வுகாணவும், அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்ட வேண்டும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நிவாரணப் பொருள்களை பார்வையிட்டார் கருணாநிதி
கருணாநிதி ராஜினாமாவா? சென்னையில் பரபரப்பு
வைகோ, கண்ணப்பன் விடுதலை!
துப்பாக்கிச்சூடு: போலீசாரை டிஸ்மிஸ் செய்ய திருமா வலியுறுத்தல்
இல‌ங்கை‌ பிரச்னை என்னால் மட்டும் தீராது : கருணா‌நி‌தி
கடலூரில் கைதியை கொல்ல முயற்சி: போலீசார் துப்பாக்கி சூடு!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...