யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நிவாரணப் பொருள்களை பார்வையிட்டார் கருணாநிதி
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008   ( 09:15 IST )
இலங்கை தமிழர்களுக்கு அனுப்பப்படும் 2 ஆயிரம் டன் நிவாரண பொருட்களை முதல்வர் கருணாநிதி நேற்று பார்வையிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக முதல்வர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க நிதி உதவிகளும், நிவாரணப் பொருட்களும் இதுவரை 10 கோடி ரூபாய் அளவுக்கு வந்துள்ளன.

அரிசி, பருப்பு, டீத்தூள், சர்க்கரை போன்ற உணவுப்பொருட்களுடன், வேட்டி, கைலி, சேலை, பெண்கள் அணியும் ஆயத்த ஆடை, துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகிய துணி வகைகளும் அடங்கிய நிவாரணப் பொருட்கள் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்குவதற்காகத் தனித்தனியே சிப்பங்களாகத் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

முதல் கட்டமாக 2 ஆயிரம் டன் நிவாரணப் பொருட்கள் சென்னையில் இருந்து கப்பல் மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இந்திய தூதரிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் அவை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும்.

இலங்கைக்கு அனுப்படும் நிவாரணப் பொருட்களை முதல்வர் கருணாநிதி நேற்று பார்வையிட்டார். இந்த பொருட்கள் 8 அல்லது 9 ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கருணாநிதி ராஜினாமாவா? சென்னையில் பரபரப்பு
வைகோ, கண்ணப்பன் விடுதலை!
துப்பாக்கிச்சூடு: போலீசாரை டிஸ்மிஸ் செய்ய திருமா வலியுறுத்தல்
இல‌ங்கை‌ பிரச்னை என்னால் மட்டும் தீராது : கருணா‌நி‌தி
கடலூரில் கைதியை கொல்ல முயற்சி: போலீசார் துப்பாக்கி சூடு!
பங்குச் சந்தை சரிவு ஏன்? சிதம்பரத்துக்கு ஜெ. கேள்வி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...