யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தாக்குதல் : போலீஸ் மீது கிருஷ்ணசாமி புகார்
மதுரை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 நவம்பர் 2008   ( 17:17 IST )
தன் மீது நடந்த தாக்குதலுக்கு ஒரு காவல் துறை அதிகாரி ஒருவரே உடந்தையாக இருந்தாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி குற்றம் சாற்றியுள்ளார்.

இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தில் ஒரு சுவர் எழுப்பப்பட்டதால் கடந்த 6 மாதமாக இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வருகிறது.

இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் முன்கூட்டியே காவல்துறைக்கு தெரிவித்து விட்டு நேற்று மாலை அங்கு சென்றேன்.அங்கு ஏறக்குறைய 2 மணி நேரம் பிரச்சினை குறித்து ஆலோசித்தேன்.பின்னர் இதில் சுமூகமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து விட்டு மதுரை நோக்கி வந்து கொண்டு இருந்தேன்.

நான் உத்தப்புரம் செல்லும் முன்பு டி.கல்லுப்பட்டி வழியாக அழைத்து சென்ற போலீசார்,மதுரை திரும்பும்போது எழுமலை வழியாக அழைத்து வந்தனர்.ஒரு சிலை அருகே சென்ற போது மர்ம கும்பல் ஒன்று வழி மறித்தது.இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் மேலும் 300 பேர் திரண்டு என மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். ஆனால் போலீசார் கண்டு கொள்ளவில்லை.என்னை கட்சி தொண்டர்கள் பாதுகாத்தனர்.

என் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒரு போலீஸ் அதிகாரியை உடந்தையாக இருந்து உள்ளார்.அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உத்தப்புரம் பிரச்சினையை விரைவில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்களே நடவடிக்கை எடுப்போம் என்றார் கிருஷ்ணசாமி.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆக்கிரமிப்பு : அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது மேலும் ஒரு வழக்கு
வைகோ கைது கண்டனக் கூட்டம் : காவல்துறை உத்தரவு ரத்து
இலங்கை போர் நிறுத்தம் செ‌ய்ய சட்டசபையில் தீர்மானம் : திருமா.
காஞ்சிபுரத்தில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்: ஜெ.
'பயம் காரணமாக விடுதலைப் புலிகளுக்கு ஜெ.மறைமுக உதவி'
அரசியலில் குதிப்பது எப்போது? ரஜினி பதில்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...