|
| வைகோ கைது கண்டனக் கூட்டம் : காவல்துறை உத்தரவு ரத்து |
| சென்னை(ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 நவம்பர் 2008 ( 17:01 IST ) | |
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது தொடர்பாக அக்கட்சி நடத்த இருந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 30ஆம் தேதி வடசென்னை மதிமுக சார்பில் தங்கசாலை அருகே கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அக்கட்சி சமர்ப்பித்த மனுவை காவல் துறை நிராகரித்தது.
இதனை எதிர்த்து மாவட்ட செயலாளர் ஜீவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மதிமுக சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர், அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே போராட்டம் நடத்த அனுமதி மறுத்து கவல் துறை உத்தரவு பிறப்பித்ததாகவும் ,இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அரசு தரப்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் தங்கவேலு, மனுதாரர் தரப்பில் அனுமதி கேட்டு மீண்டும் விண்ணப்பித்தால் அதனை காவல் துறை பரிசீலிக்கும் என்றார்.
இதனையடுத்து மதிமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்து காவல் துறை பிறப்பித்த உத்தரவை, நீதிபதி சுகுணா ரத்து செய்தார்.
மேலும் பொதுக்கூட்டம், உண்ணா விரதம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டம் நடத்துவது தொடர்பாக 5 தினங்களுக்கு முன்பே அனுமதி கேட்டு காவல்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அந்த விண்ணப்பத்தை 2 தினங்களில் பரிசீலித்து உரிய உத்தரவை காவல் துறை பிறப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து நாளை நடைபெறுவதாக இருந்த உண்ணாவிரத போராட்டத்தை மதிமுக ஒத்திவைத்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|