|
| இலங்கை போர் நிறுத்தம் செய்ய சட்டசபையில் தீர்மானம் : திருமா. |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 நவம்பர் 2008 ( 16:11 IST ) | |
'இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை தமிழர் படுகொலைப் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்தம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டு மொத்த தமிழகமே உரத்து முழங்கி வருகிறது.ஆனால், அதற்கான முயற்சிகளை எடுக்காமல் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது.
இந்நிலையில் வரும் 10ம் தேதி கூடவிருக்கிற தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் ஈழத் தமிழரைப் பாதுகாத்திட உடனடி போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
செம்மொழி தமிழைக் கொச்சைப்படுத்தும் நோக்கில், கன்னடம், தெலுங்கு ஆகியவற்றையும் செம்மொழிகளாக மத்திய அரசு அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டிருப்பதும், சென்னையில் செங்கை சிவத்தின் வீடு தாக்கப்பட்டிருப்பதும் கடும் கண்டனத்துக்குரியது. இந்த சம்பவங்கள் தொடர்பாக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|