யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
காஞ்சிபுரத்தில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்: ஜெ.
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 நவம்பர் 2008   ( 14:53 IST )
"காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளையைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு மற்றும் குசஸ்தலை ஆறுகளில் சுமார் 20 அடிக்கும் மேலாக விதிமுறைகளை மீறி திமுகவினரால் மணல் எடுக்கப்படுகிறது. இதனால், 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் பாலாற்றில் கொள்ளையடிக்கப்படும் மணல், செவிலிமேடு, வந்தவாசி, ஓரிக்கை, மிலிடெரி, வாலாஜாபாத், தென்னேரி, சுங்குவார் சத்திரம் ஆகிய சாலைகள் வழியாக கனரக வாகனங்கள் மூலம் தினசரி எடுத்துச் செல்லப்படுகின்றன.

குசஸ்தலை ஆற்றில் கொள்ளை அடிக்கப்படும் மணல் வேலஞ்சேரி, தாழவேரி, பூணிமாங்காடு, அருங்குளம், நெமிலி ஆகிய சாலைகள் வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதனால், அந்த சாலைகள் குண்டும், குழியுமாக மாறி, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன.

உத்திரமேரூர் தொகுதியில், வாலாஜாபாத்தில் இருந்து சுங்குவார் சத்திரம் செல்லும் சாலை, திருவாலங்காடு கூட்டுச்சாலை முதல் அரக்கோணம் வரை செல்லும் சாலை போன்றவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் கனிம வளமான மணலைக் கொள்ளையடித்துக் கொண்டு, சாலைகளை செப்பனிடாத, மின்வெட்டை நீட்டித்துக் கொண்டிருக்கின்ற திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'பயம் காரணமாக விடுதலைப் புலிகளுக்கு ஜெ.மறைமுக உதவி'
அரசியலில் குதிப்பது எப்போது? ரஜினி பதில்
கிருஷ்ணசாமி மீது தாக்குதல்: பஸ்கள் எரிப்பு
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார விழா
ஸ்பெக்ட்ரம் : விவாதத்திற்கு தயாரா ? அமைச்சர் ராசா சவால்
கிருஷ்ணசாமி கார் மீது தாக்குதல்: எழுமலையில் பதற்றம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...