யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் : ரஜினி
சென்னை (ஏஜென்சி), 3 நவம்பர் 2008   ( 12:52 IST )
அரசியலில் இறங்குவது குறித்த தனது முடிவை எந்திரன் படத்திற்குப் பின் அறிவிப்பதாகவும், அதே சமயம் அது ஆண்டவன் கையில் உள்ளதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என்றும், தனி அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். சில இடங்களில் ரஜினி பெயரில் ரசிகர்கள் தாங்களாகவே கட்சித் தொடங்கினர்.

ரசிகர்கள் கொடுத்து வந்த நெருக்கடியை அடுத்து மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க ரஜினி முடிவு செய்தார். அதன்படி மாவட்டத்திற்கு 7 நிர்வாகிகள் வீதம் மொத்தம் 224 பேரை சந்திக்க ரஜினி நேரம் ஒதுக்கினார்.

அதன்படி இன்று காலை சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளிதார். அப்போது ரஜினி கூறியதாவது:


நீங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள்.அதேப்போன்று நானும் உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.இதுதான் நோக்கம்.

முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள்.என்னுடைய எதிர் காலத்திட்டம் தற்போதைக்கு எந்திரன் படம்தான்.

மன்ற நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யப்படுமா? என்று கேட்கப்படுகிறது.

பணம், ஜனம் இரண்டையும் ஒன்று சேர்க்கக் கூடாது. சேர்ந்தால் அங்கு அரசியல் வந்துவிடும். என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள்.உங்களால் இயன்றதை நீங்களே செய்யுங்கள்.நான் தனியாக உதவிகள் செய்துகொண்டே தான் இருக்கிறேனசமூகத்தில் உங்களுக்கு ( ரசிகர்களுக்கு ) என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும்படி செய்வேன்.

என்னை குழப்பவாதி என்று சில பத்திரிக்கைகளில் எழுதுவதைப் ப்பற்றி கேட்கப்படுகிறது.சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித்தான் இருக்கிறது.எல்லாம் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து செய்வதில்லை.

நாம் நினைப்பது சரி எனும்போது பேசி விடுகிறேன்.வேறு கோணத்தில் பார்க்கிறவனுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அது தவிர்க்க முடியாது.குழப்பவாதி என்று சொல்லலாம். சுயநலத்தோடு எதையும் செய்ய மாட்டேன்.எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்வேன்.

சில செய்திகளை படிக்கும் போது சிரிப்பாக இருக்கும். சில சிந்திக்க வைக்க செய்யும். சமீபத்தில் நான் வெளியிட்ட அறிக்கையை பற்றிக்கூட குழப்பவாதி என்று கூறினார்கள். அன்று நான் அந்த முடிவு எடுக்காவிட்டால் நாட்டில் எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன்.இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன்.

ஒகேனக்கல் விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன? என்று கேட்கிறீர்கள்.முன்னாலே முன்னாலே போகனும் என்று நான் நினைக்கிறேன்.நீங்கள் பின்னாலே பின்னாலே போகனும் என்கிறீர்கள். விஷயம் நடந்தது முடிந்தது.விட்ருங்க.அதிலேயே இருந்தால் எப்படி?

முதலில் ஒகேனக்கல் பிரச்சனை சினிமா சம்பந்தப்பட்டது அல்ல.ஆனால் கர்நாடகாவில் எந்த பிரச்சனையானாலும் தியேட்டரைத்தான் முதலில் அடிப்பார்கள்.அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த கூட்டத்தில் நான் அமர்ந்தேன்.

அங்கு பேசியவர்கள் எப்படி பேசினார்கள் என்று உங்களுக்கு தெரியும்.எனக்கு சிறிது கோபம் ஏற்பட்டது.அப்போது உணர்ச்சி வசப்பட்டு உதைக்கனும் என்று கூறிவிட்டேன். தண்ணீர் கொடுக்க மறுப்பவர்களை உதைக்க வேண்டும் என்று கூறி இருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும்.

அப்போது குசேலன் ரிலீசாகும் சமயம் கர்நாடகா விநியோகஸ்தர்கள் என்னைச் சந்தித்தார்கள். எடியூரப்பா தியேட்டருக்கு பாதுகாப்பு தருவதாக கூறினார்.ரசிகர்கள் கத்தி, கபடாவோடு நாங்களும் தயார் என்றார்கள்.

ஒரு பிரச்சனை ஆரம்பித்தால் உடனே முடிய வேண்டும்.இழுத்தடிக்கக் கூடாது. அதனால் பொது நலத்திற்காக, மற்றவர்கள் நலனுக்காக நான் மன்னிப்பு கேட்டேன்.

மீண்டும் மீண்டும் நான் சொல்வது எல்லாம் குடும்பத்தை கவனியுங்கள். நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என்று என் கடமைகளை செய்து வருகிறேன்.

நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். கடமையைச் செய். பலனை எதிர்பார் இதுதான் நமது தத்துவம். அரசியலை பொறுத்தவரை ஒருவர் வெற்றி பெறுகிறார்கள் என்றால், அது திறமையாலோ, புத்திசாலித்தனத்தாலோ, உழைப்பாலோ என்று கூறினால் அது முட்டாள்தனம்.

சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் ஆகியவை தான் ஒருவரின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கிறது.

சரியில்லாத நேரத்தில் நீங்கள் குட்டிகரணம் அடித்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது.1996ஆம் ஆண்டு இருந்த நிலைமை வேறு.அன்று பதவியில் போய் அமர வேண்டியது தான்.அப்படி ஒரு சூழ்நிலை இருந்தது.ஆனால் யாரோ ஜெயித்து நாம் அனுபவிப்பதா?.

நமக்கு ஒரு விஷயத்தில் திறமை இருக்க வேண்டும். அனுபவம் இருக்க வேண்டும். அதை நாம் செய்ய வேண்டும். தெரியாமல் ஒரு விஷயத்தை செய்யக் கூடாது.

என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போது கூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன்.

பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு இருந்தால் தான் இனிமையாக இருக்கம். ஒருவேளை ஆண்டவன் சொன்னால் நாளைக்கே நடக்கலாம்.தொடர்ந்து நாட்டில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.

தற்போது நாடு சரியில்லை.தமிழ்நாடு மட்டும் அல்ல.ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது.பார்க்கலாம் ஆண்டவன் இருக்கிறான் என்றார் ரஜினி.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தாக்குதல் : போலீஸ் மீது கிருஷ்ணசாமி புகார்
ஆக்கிரமிப்பு : அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது மேலும் ஒரு வழக்கு
வைகோ கைது கண்டனக் கூட்டம் : காவல்துறை உத்தரவு ரத்து
இலங்கை போர் நிறுத்தம் செ‌ய்ய சட்டசபையில் தீர்மானம் : திருமா.
காஞ்சிபுரத்தில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்: ஜெ.
'பயம் காரணமாக விடுதலைப் புலிகளுக்கு ஜெ.மறைமுக உதவி'
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...