யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கிருஷ்ணசாமி மீது தாக்குதல்: பஸ்கள் எரிப்பு
சென்னை/ நெல்லை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 நவம்பர் 2008   ( 12:28 IST )
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் கார் மீது தாக்கப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். தமிழகத்தின் பல இடங்களில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.

மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்துக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று வருகை தந்து, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டார். இரவு 8 மணியளவில் எழுமலை அருகே சென்றபோது கிருஷ்ணசாமியின் கார் உட்பட 4 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அங்குள்ள பல கடைகளும் சேதப்படுத்தப்பட்டன.

இந்த தாக்குதலில் இருந்து கிருஷ்ணசாமியை பாதுகாத்து, காவல்துறையினர் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இத்தகவல் அறிந்ததும் கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் நள்ளிரவிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் அருகே, நேற்று நள்ளிரவு அரசு பேருந்தை விஷமிகள் சிலர் வழிமறித்தனர். அதில் இருந்த பயணிகளை இறக்கி விட்டு, பேருந்தை பெட்ரோல் ஊற்றிக் கொழுத்தினர்.

கோவில்பட்டியில் இருந்து ராஜபாளயம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று வன்முறையாளர்களால் எரிக்கப்பட்டது. இதேபோல் எழுமலை கிராமத்தைச் சுற்றி சில இடங்களில் நேற்று இரவு முதல் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

வன்முறைச் சம்பவங்களை அடுத்து நெல்லை மாவட்டத்தில் பதற்றமாக உள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார விழா
ஸ்பெக்ட்ரம் : விவாதத்திற்கு தயாரா ? அமைச்சர் ராசா சவால்
கிருஷ்ணசாமி கார் மீது தாக்குதல்: எழுமலையில் பதற்றம்
மதுரையில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்: ஜெ.
இலங்கை நிதி யாருக்கு? : ஜெ. சந்தேகம்
மத்திய அரசை பாமக வலியுறுத்தாதது ஏன்: முதல்வர்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...