|
| ஸ்பெக்ட்ரம் : விவாதத்திற்கு தயாரா ? அமைச்சர் ராசா சவால் |
| புதுடெல்லி / சென்னை ( ஏஜென்சி), 3 நவம்பர் 2008 ( 11:15 IST ) | |
தொலைத்தொடர்புத்துறை அலைவரிசைகள் ( ஸ்பெக்ட்ரம் ) ஒதுக்கீட்டில் முறைகேடு என குற்றம் சாற்றுபவர்கள் அது தொடர்பான விவாதத்திற்கு தயாரா? என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அ.ராசா சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அமைச்சகத்தில் உள்ள விதிமுறை களை அறியாத நிலையிலும், ஏலம் விடப்பட வேண்டிய அலைவரிசை எது, ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய அலைவரிசை எது என்ற தெளிவில்லாத நிலையிலும் சில கட்டுரைகளை அவ்வப்போது ஆங்கில இதழ்கள் தங்கள் கருத்துக்களாக எழுதியுள்ளன.
அவைகளுக்கு உண்மை நிலையை விளக்கும்போதோ அல்லது அமைச்ச கத்தினுடைய விதிமுறைகளை தெரிந்துகொண்ட பிறகோ தங்களை திருத்திக்கொண்டு மாற்றுக் கட்டுரைகள் அல்லது மறுப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன. சில கட்டுரையாளர்கள் உண்மை தெரிந்த பிறகு ஊமைகளாகிவிட்டனர்.
விதிகளை அறியாத நிலையில் உள்நோக்கம் இல்லாமல் தங்களுக்கே தெரிந்த சில உண்மைகளை வைத்து கட்டுரை எழுதுவது ஒரு விதத்தில் ஆரோக்கியமான பத்திரிகை உத்திதான்.
ஆனால் எனது விரிவான பேட்டிக்குப் பிறகும் திட்டமிட்டு, இப்பிரச் சனையில் உள்ள உண்மைகளையும், சட்டவிதிமுறைகளையும் மறைத்து தவறாக செய்தி வெளியிடும் பத்திரிகைகளின் நிழலில் குளிர்காய்ந்து கொண்டு இராசாவை தாக்குகின்ற சாக்கில் திமுகவை களங்கப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?
எந்த விதிமுறையை தயாநிதிமாறன் கடைபிடித்தாரோ அதே விதிமுறையை சிறிதும் தளர்த்தாமல் உரிமங்களையும், அலைவரிசை களையும் பிரதமரின் ஆலோ சனைக்குப் பிறகு நான் வழங்கியபோது எழும் அர்த்தமற்ற அல்லது அறியா மையில் விளையும் விமர்சனங்களை ஊதி அரசியல்படுத்தி திமுகவை காயப்படுத்தும் வேலையில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம்?
அலைவரிசைகள் ஒதுக்கீடு குறித்த ஆரோக்கியமான விவாதத்திற்கு நான் தயார். நாட்டுக்கும் அதுதான் நல்லது.விமர்சிப்பவர்கள் விவாதத்திற்கு தயாரா என்று அறிய விரும்புகிறேன் என அந்த அறிக்கையில் ராசா கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|