யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கிருஷ்ணசாமி கார் மீது தாக்குதல்: எழுமலையில் பதற்றம்
மதுரை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 நவம்பர் 2008   ( 10:05 IST )
உத்தரபுரம் கிராமத்துக்கு சென்று திரும்பிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள சர்ச்சைக்குரிய உத்தப்புரம் கிராமத்துக்கு புதிய தமிழகம் ட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று வந்தார். அங்கு ஜாதி சுவர் இடிக்கப்பட்டது மற்றும் அதை தொடர்ந்து நடந்த கலவரம் ஆகியவை குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இரவு 8 மணியளவில் எழுமலை அருகே சென்றபோது, கிருஷ்ணசாமி ஆதரவாளர்களுக்கும், அங்குள்ள கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கலவரமாக வெடித்தது.

இதில், கிருஷ்ணசாமியின் கார் உட்பட 4 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அங்குள்ள பல கடைகளும் சேதப்படுத்தப்பட்டன.

இதையடுத்து, பாதுகாப்புக்கு சென்றிருந்த போலீசார் கிருஷ்ணசாமியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அப்போது, கிராமத்தினர் கல் வீசி தாக்கியதில் சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.ஐ. பூவேந்திரன் என்பவர் காயம் அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது. இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மதுரையில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்: ஜெ.
இலங்கை நிதி யாருக்கு? : ஜெ. சந்தேகம்
மத்திய அரசை பாமக வலியுறுத்தாதது ஏன்: முதல்வர்
திரையுலகினர் உண்ணாவிரதம்: ரூ.46 லட்சம் வசூல்!
நவ.5ல் திரைப்பட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!
நிவாரண நிதியால் பிரச்சனை திசை திரும்பி விட்டது : ராமதாஸ்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...