|
| மதுரையில் அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்: ஜெ. |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2008 ( 16:04 IST ) | |
மதுரையில் நிலவும் கடும் மின்வெட்டைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 29 மாத கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் நாலுகால் பாய்ச்சலில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றால், மதுரை மாவட்டம் மட்டும் எட்டுக்கால் பாய்ச்சலில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
ஏனெனில், முதல்வர் கருணாநிதியை கட்டுப்படுத்தும் நபர் மதுரையில் இருந்துகொண்டு மக்களுக்கு பல்வேறு விதங்களில் இன்னல்களை தந்து கொண்டிருக்கிறார்.
மதுரை மாநகராட்சியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுதொழில்கள் இயங்கி வரும் நிலையில், மின்வெட்டு காரணமாக ஜெய்ஹிந்த் புரம், புதூர், அனுப்பானடி, செல்லூர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சிறு தொழில்கள் மற்றும் நெசவுத் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களில் இரண்டு மாதங்களில் 2 ஆயிரம் யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், மாலை 6மணி முதல் இரவு 10 மணி வரை தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் இருந்து மின்சாரத்தைப் பெறக்கூடாது என்றும், மீறினால் அவர்களுடைய மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது, எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் அமைந்துள்ளது.
திமுக அரசின் இதுபோன்ற அறிவிப்பின் காரணமாக அனைத்துப் பொருட்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அதன் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, அனைத்துப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
மின்சார வெட்டு, வேலை இழப்பு, ஆகியவை ஒரு புறமும், விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு, மு.க.அழகிரியின் அட்டகாசம் ஆகியவை மறுபுறமும் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன.
எனவே, மின்வெட்டுக்கு காரணமான திமுக அரசையும், அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்காத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மதுரை ஸ்காட் ரோடு தபால் நிலையம் எதிரே நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|