யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இலங்கை நிதி யாருக்கு? : ஜெ. சந்தேகம்
சென்னை (ஏஜென்சி), 2 நவம்பர் 2008   ( 15:22 IST )
இலங்கைத் தமிழருக்காக வசூல் செய்யப்படும் நிவாரண நிதி உரியவர்களுக்கு முறையாக சென்றடையுமா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கைத் தமிழர்களின் நிவாரண நிதி என்ற போர்வையில், முதலில் கனிமொழியை முன்னிலை படுத்தினார் கருணாநிதி.
அடுத்ததாக, தனது மூத்த மனைவி தயாளு அம்மாளை முன்னிலைப் படுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் நிவாரண நிதிக்காக, கருணாநிதியின் மூத்த மனைவி தயாளு அம்மாள் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை கருணாநிதியிடம் வழங்கியுள்ளார்.

கருணாநிதியின் மனைவிக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்கக்கூடிய அளவுக்குப் பணம் எங்கிருந்து வந்தது? அவருக்கு எந்த வழியில் வருமானம் வருகிறது? என்பதை எல்லாம் கருணாநிதி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

தனது குடும்பத்தின் சார்பாக கருணாநிதியே மொத்தமாக கொடுத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், முதலில் துணைவியின் மகளிடமிருந்தும், பின்னர் தனது மனைவியிடம் இருந்தும் இலங்கைத் தமிழர்கள் நிவாரண நிதிக்காக ரூ.5 லட்சத்தை பெற்றிருக்கிறார். இதை பார்த்து மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.

இலங்கைத் தமிழர்களுக்காக நன்கொடை வழங்குவதில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கட்டாயப் படுத்தப்படுவதாகவும், ஊழியர்களின் அனுமதியின்றி அவர்களுடைய சம்பளத்தில் இருந்து ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதை கண்டிக்கிறேன்.

இலங்கைத் தமிழர்களுக்காக வசூலிக்கப்படும் நிதி மற்றும் உணவுப் பொருட்கள் விடுதலைப் புலிகளுக்கு அனுப்பப்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மத்திய அரசை பாமக வலியுறுத்தாதது ஏன்: முதல்வர்
திரையுலகினர் உண்ணாவிரதம்: ரூ.46 லட்சம் வசூல்!
நவ.5ல் திரைப்பட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்!
நிவாரண நிதியால் பிரச்சனை திசை திரும்பி விட்டது : ராமதாஸ்
போரை நிறுத்த தந்தி அனுப்புங்கள்: விஜய்
இல‌ங்கை‌ நடப்பது விடுதலைப் போராட்டம் : ‌திருமா
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...