|
| மத்திய அரசை பாமக வலியுறுத்தாதது ஏன்: முதல்வர் |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2008 ( 15:04 IST ) | |
"தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த, மத்திய அரசை பாமக வலியுறுத்தாதது ஏன்?" என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 'ஈழத்தமிழர் பிரச்சனை திசை திருப்பப்பட்டு விட்டது என்றும், அனைத்துக் கட்சி தீர்மானங்கள் கிடப்பிலே போடப்பட்டு விட்டது" என்றும் நேற்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், இரு வாரங்களுக்குள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு முன்வராவிட்டால் தமிழக எம்பிக்கள் பதவி விலக நேரிடும் என்பதும் ஒன்று. அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதே அந்த கருத்துக்கு மாறாக மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
அந்த தீர்மானத்திற்கு இணங்க திமுக எம்பிக்கள் மட்டுமே என்னிடம் பதவி விலகல் கடிதம் தந்தனர். மற்றவர்கள் தரவில்லை.
அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களே எம்.பி.க்கள் பதவி விலகல் முடிவுக்கு மாறாக இருக்கும்போது, நாமே தீர்மானம் தோல்வி அடைந்துவிட்டது என்று கூறுவது என்ன நியாயம்?
இலங்கை தமிழர்கள் பசியாலும், பட்டினியாலும் அவதிப்படும்போது அவர்களுக்கு நம்மால்ஆன உதவியை செய்ய வேண்டும் என்று தான் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். அதிலும் குறை கண்டால் என்ன செய்வது?
மத்திய அரசில் திமுகவை போலவே பாமகவும் ஓர் அங்கம். அவருடைய மகனே அதில் முக்கிய அமைச்சராக இருக்கிறார். எனவே என்னைப்போலவே மத்திய அரசை வலியுறுத்தும் பொறுப்பு ராமதாசுக்கும் உண்டு.
இலங்கையிலே உள்ள ஒவ்வொரு தமிழனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே நமது நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றிட நாம் ஒற்றுமையை கட்டிக்காக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|