|
| திரையுலகினர் உண்ணாவிரதம்: ரூ.46 லட்சம் வசூல்! |
| சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2008 ( 12:19 IST ) | |
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ரூ.46 லட்சம் வசூலானது.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் கலந்துக் கொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது, இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக திரையுலகினர் பலரும் நிதியுதவி வழங்கினர்.
நடிகர் ரஜினி ரூ.10 லட்சம், சிவகுமார் மற்றும் கமல் ஆகியோர் தலா 5 லட்சம், சரத்குமார் ரூ.2.5 லட்சம் என பலரும் நிதி வழங்கினர்.
லாரன்ஸ் 2 லட்சம்; விஜய் ரூ.1 லட்சம், பீலி சிவம் ரூ.5,000, சிபிராஜ் ரூ.1 லட்சம், மோகன் ரூ.25 ஆயிரம், நடிகர் லாரன்ஸ் தனது பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் திரட்டிய 10 லட்சம் ரூபாயையும் தனது சார்பாக ரூ.2 லட்சம் சேர்த்து ரூ.12 லட்சம், எஸ்.ஏ.சந்திரசேகரன் ரூ.50 ஆயிரம், சிம்பு ரூ.2 லட்சம், வடிவேலு ரூ.50 ஆயிரம், விஜயகாந்த் ரூ.1 லட்சம் வழங்கினர். நடிகைகள் சார்பிலும் நிதியுதவி வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.46 லட்சம் வசூலானது.
உண்ணாவிரதத்தின் முடிவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேசுகையில், "எதையும் சட்டத்திற்கு உட்பட்டு பேச வேண்டும் என்ற நிபந்தனைபடியே அனைவரும் பேசியுள்ளனர். முதல்வர் கருணாநிதி தலைமையில், தமிழ்த் தலைவர்கள் கொண்ட குழு இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். உலக மக்களின் கவனத்தை ஈர்க்க இந்தப் போராட்டங்கள் உதவும்" என்றார்.
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று நடிகர், நடிகைகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாலை 4 மணியளவில் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|