யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நிவாரண நிதியால் பிரச்சனை திசை திரும்பி விட்டது : ராமதாஸ்
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 1 நவம்பர் 2008   ( 18:21 IST )
இலங்கை தமிழர்களுக்கான நிவாரண நிதி திரட்டுவதாகூறி போர் நிறுத்தம் கோரிக்கையை தமிழக முதலமைசர் கருணாநிதி திசை திருப்ப்பிவிட்டுவிட்டார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாற்றியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 14 ஆம் தேதி கோட்டையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.2 வாரத்துக்குள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்வோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறுநாளே அந்த தீர்மானத்தை பிரதமரிடம் அமைச்சர் பாலு கொடுத்தார்.24ஆம் தேதி மனித சங்கிலி நடந்தது.அன்று முதல்வர் பேசுகையில், நாம் நம்பிக்கை கொள்ளும் வகையில் பிரதமர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளார் என்றார். அன்று முதல் வேகம் குறையத் தொடங்கியது.

26ஆம் தேதி பிரணாப் முகர்ஜி வந்தார்.மத்திய அரசுக்கு சிக்கலை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.அன்றோடு அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் கிடப்பில் போடப்பட்டு விட்டன.

27ஆம் தேதி இலங்கை தமிழர்களுக்கு உதவ நிவாரண நிதி திரட்டப் போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.நிதி திரட்டுவது தவறு இல்லை.பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதை ஆதரிக்கிறோம்.ஆனால், நிதி திரட்டுவது மட்டுமே தீர்வாகிவிடுமா?.

நிவாரண நிதி வசூல் மூலம் இலங்கை தமிழர் பிரச்சினையையே திசை திருப்பி விட்டனர்.இதனால் தமிழர்களின் எழுச்சி மழுங்க தொடங்கி இருக்கிறது.முழுக் கவனமும் நிதி வசூலில் முடங்கிக் கிடக்கிறது.போர் நிறுத்த கோரிக்கை பின் தள்ளப்பட்டுவிட்டது.

இலங்கை தமிழர்களுக்கு உண்மையான நிவாரணம் உடனடியாக போர் நிறுத்தம் தான்.சண்டை ஓய்ந்து விட்டால் நிவாரணங்களை அவர்களே தேடிக் கொள்வார்கள்.ஆனால், போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசை வலியுறுத்துவதில் நாம் தோற்றுவிட்டோம்.

அனைத்துக் கட்சி தீர்மானத்தின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதற்கு கருணாநிதி பதில் சொல்ல வேண்டும். வெளிப்படையாகவே மத்திய அரசை கண்டிக்க வேண்டும்.

ராஜபக்சே மீது வழக்கு தொடர ஐ.நா. சபை மூலம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.மத்திய அரசுக்கு இந்த பிரச்சனையில் கருணாநிதி இன்னும் அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
போரை நிறுத்த தந்தி அனுப்புங்கள்: விஜய்
இல‌ங்கை‌ நடப்பது விடுதலைப் போராட்டம் : ‌திருமா
இலங்கை பிரச்னையில் உலக நாடுகள் தலையிட வேண்டும்: கமல்
இலங்கையில் தாக்குதலை நிறுத்த வேண்டும் : ரஜினிகாந்த்
திருவொற்றியூர்: அதிமுக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!
இலங்கை பிரச்னை: திமுக அரசு மீது விஜயகாந்த் சாடல்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...