|
| போரை நிறுத்த தந்தி அனுப்புங்கள்: விஜய் |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 1 நவம்பர் 2008 ( 17:22 IST ) | |
இலங்கையில் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு தந்தி அனுப்பும்படி, தனது ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:
இலங்கையில் தமிழர்கள் மீது நடந்து வரும் தாக்குதல்கள் வருத்தமளிக்கிறது.இது கண்டிக்கத்தக்கது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இந்த நேரத்தில் எனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். 'இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும்; தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்' என்ற வாசகத்துடன் நீங்கள் அனைவரும் பிரதமருக்கு இன்றே தந்தி அனுப்ப வேண்டும். ஓராயிரம் அல்ல, லட்சம் அல்ல, கோடிக் கோடியாக தந்திகள் குவியட்டும்.
இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.
உண்ணாவிரதம் நடந்து கொண்டிருக்கையில், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ. நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் மேடைக்கு நேரில் வந்து, போராட்டத்துக்கு தங்களின் ஆதரவையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|