யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தடையை நீக்க இந்தியாவுக்கு பிரபாகரன் வேண்டுகோள்
சென்னை / கொழும்பு (ஏஜென்சி), 26 அக்டோபர் 2008   ( 17:39 IST )
தமீழழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'நக்கீரன் 'வாரமிருமுறை இதழுக்கு இ மெயில் மூலம் அளித்துள்ள பேட்டியில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர், ஈழ மக்களின் நீண்ட நாள் அவாவை நிறைவேற்ற தங்கள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்கி, தங்களை ஆதரிக்க வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

புலிகளின் வலுவான முக்கிய பகுதிகளில் சிங்கள ராணுவம் நெருங்கியிருப்பது உண்மதான் என கூறியுள்ள பிரபாகரன், அதே சமயம் புலிகளின் நிர்வாக தலைநகஏரான கிளிநொச்சியை பிடிப்பதென்பது சிங்கள ராணுவத்தினருக்கு இன்னும் நீண்ட, பகல் கனவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் அளிக்கப்பட வேண்டும் என கோரியுள்ள தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் நிலை பாரட்டத்தக்கது என்று கூறியுள்ள பிரபாகரன், கலைஞர் ஒரு தமிழ தேசியவாதி என்றும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தது மட்டுமன்றி, செயலிலும் காட்டியுள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.

அல்லலுறும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்டுள்ள நிலை தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும், எதிர்காலத்திலும் இத்தகைய ஆதரவை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பிரபாகரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் குரலெழுப்பியதாகவும், ஆனால் அவர் தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டிருந்தால் அது குறித்து தம்மால் எதுவும் கூறமுடியாது என்றும் பிரபாகரன் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இதர தமிழக தலைவர்கள் தெரிவித்து வரும் ஆதரவு குறித்து புகழ்ந்துள்ள பிரபாகரன், இந்த ஆதரவு நிச்சயம் தங்களுக்கு மேலும் வலுவைக் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ள பிரபாகரன், வட இலங்கையில் புலிகள் மேற்கொண்ட கடுமையான தாக்குதலால், சிங்கள ராணுவத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வாழும் பகுதிகளில் சிங்கள ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள், தங்களது வீடுகளைவிட்டு, அகதிகளாக பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் சிங்கள ராணுவத்திற்கு இந்தியா ராடார் உள்ளிட்ட ராணுவ உபகரணங்களை அளித்து, பயிற்சியும் அளிப்பது வருத்தமளிப்பதாக உள்ளது என்றும் அந்த பேட்டியில் பிரபாகரன் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
' துயரத்தில் ஈழ தமிழர் : தீபாவளியை கொண்டாட வேண்டாம் '
இருள் அகன்று மகிழ்ச்சி பெருகட்டும் : ஜெ. தீபாவளி வாழ்த்து
இலங்கை : கருணாநிதியுடன் சோனியா பேச்சு
வைகோ,சீமானை விடுதலை செய்ய வேண்டும் : ராமதாஸ்
கருணாநிதியை கைது செய்ய ஜெ.வலியுறுத்தல்
திருப்பூ‌ர் மாவட்டம்: அரசாணை வெளியிட்டது அரசு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...