|
| ' துயரத்தில் ஈழ தமிழர் : தீபாவளியை கொண்டாட வேண்டாம் ' |
| சென்னை(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2008 ( 16:32 IST ) | |
ஈழத்தில் தமிழர்கள் பெரும் துயரத்தில் இருக்கும் இந்த வேளையில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
இலங்கையில் குண்டுகள் போடுவது நிறுத்தப்படாமல் இருக்கும் இந்த நிலையில், தீபாவளியை பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டாம் என்று பொதுமக்களை குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி பல போராட்டங்கள் நடந்தபோதும், மத்திய அரசு வெளிப்படுத்தும் கருத்துக்கள் எந்த மன நிறைவையும் தரவில்லை.
இலங்கைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களையோ அல்லது எம்.பிக்களையோ அனுப்ப வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ் மக்களுடைய ஒருமித்த குரலை அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் சேர்ந்து வலியுறுத்த வேண்டும்.
கலைத்துறையைப் பொறுத்தவரையில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது இயல்பு.இதை அரசியல் கருத்தாகவோ, முழக்கமாகவோ கருதக் கூடாது.எனவே அவர்கள் பிரச்சினையில் அனுதாபத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள் என்று கூறியுள்ளார் பாண்டியன்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|