|
| இருள் அகன்று மகிழ்ச்சி பெருகட்டும் : ஜெ. தீபாவளி வாழ்த்து |
| சென்னை( ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2008 ( 15:44 IST ) | |
தமிழக மக்களை கவ்வியுள்ள இருள் அகன்று அனைவரது வாழ்விலும் ஒளியும், இன்பமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தி :
தீபாவளி திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் மண்டிக் கிடக்கும் இருளை மக்கள்ஏற்றி வைக்கும் ஒளி அழித்து விடுகிறது. அதே போல், மானிடர்கள் உள்ளத்தில் சூழ்ந்திருக்கும் அறியாமையாகிய இருளை அழித்து அறிவொளி ஏற்ற வேண்டும் என்பதே தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம்.
இந்தத் தீபாவளி நன்னாளில் தமிழக மக்களை கவ்வியுள்ள இருள் அகன்று, அனைவரது வாழ்விலும் ஒளி, இன்பம், மகிழ்ச்சி ஆகியவை பெருகுவதற்கான சூழ்நிலை விரைவில் உருவாக வேண்டும் என்னுடைய அவாவினை தெரிவித்து எனதருமை தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|