|
| இலங்கை : கருணாநிதியுடன் சோனியா பேச்சு |
| சென்னை (ஏஜென்சி), 26 அக்டோபர் 2008 ( 14:09 IST ) | |
இலங்கை பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டு தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி இன்று பகல் 12 மணியளவில் முதலமைச்சர் கருணாநிதியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடினார்.
அப்போது இலங்கை பிரச்சனை குறித்தும் தற்போதுள்ள சூழ்நிலைகள் குறித்தும் மத்திய அரசு எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சரிடம் கூறியதோடு, இன்று பிற்பகலில் மேலும் அது பற்றி விரிவாக பேசுவதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அனுப்பவிருப்பதாகவும் தெரி வித்தார்.
சோனியாவுக்கும்,பிரதமருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், இலங்கை பிரச்சனையில் இந்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்காக தமிழ் மக்களின் சார்பில் தனது நன்றியை முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|