யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கருணாநிதியை கைது செய்ய ஜெ.வலியுறுத்தல்
சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2008   ( 12:47 IST )
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திமுக அரசை கலைத்து விட்டு, முதலமைச்சர் ருணாநிதியை கைது செய்ய வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது :

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத்தலைவர் கண்ணப்பன் ஆகியோரை தாம் அறிக்கை வெளியிட்ட பின்னரே தமிழக அரசு கைது செய்துள்ளது.

மேலும், விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோரை கைது செய்யாமல், வைகோவை மட்டும் கைது செய்துள்ளது, முதல்வர் கருணாநிதியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது என நான் மீண்டும் கூறிய பின்னரே, இயக்குனர்கள் இருவரும் அரை மனதுடன் கைது செய்யப்பட்டனர்.

தமிழக முதல்வரே விடுதலைப் புலிகளின் அனுதாபி எனத் தெரிவித்துள்ள அவர், வைகோவை கைது செய்த போதே ஏன் இயக்குனர்கள் அமீர், சீமானை தமிழக அரசு கைது செய்யவில்லை.

மேலும், திமுக அரசு நடத்திய மனித சங்கிலிப் போராட்டத்தில் அவர்கள் இருவரும் பங்கேற்பதற்கு அவகாசம் அளித்து விட்டு இறுதியாகவே அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுவே தமிழக அரசு அவர்களை அரைமனதுடன் கைது செய்தது என்பதற்கு ஆதாரம்.

எனவே, விடுதலைப்புலிகளின் அனுதாபியான கருணாநிதியை கைது செய்வதுடன், தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும்.ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக அரசை கலைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருப்பூ‌ர் மாவட்டம்: அரசாணை வெளியிட்டது அரசு
'வைகோவை கைது செய்ய முதலில் அறிக்கை விட்டவர் ஜெ.தான்'
30-ம் தேதி தேவர் நினைவிடத்தில் ஜெ. அஞ்சலி
அமீர் கைதை கண்டித்து உதவி இயக்குனர்கள் போராட்டம்
அமீர் கைதுக்கு திருமாவளவன் கண்டனம்
மத்திய அரசு மீதான நம்பிக்கை வீண் போகவில்லை: முதல்வர்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...