யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திருப்பூ‌ர் மாவட்டம்: அரசாணை வெளியிட்டது அரசு
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 25 அக்டோபர் 2008   ( 18:42 IST )
கோவை, ஈரோடு மாவட்டங்களை பிரித்து, திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமை‌ப்பதற்கான அரசாணையை த‌மிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் வருவாய்த் துறை சார்பில் அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய 2 மாவட்டங்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டம், ஈரோடை தலைமையிடமாக கொண்டு ஈரோடு மாவட்டம் (ஏற்கனவே உள்ளது), மூன்றாவதாக புதிதாக திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு திருப்பூர் மாவட்டம் என பிரிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தாலுகாக்களும், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம், பவானி தாலுகாக்களும் அடங்கும்.

புதியதாக உதயமாகும் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை (இவை இதுவரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்தது), தாராபுரம், காங்கேயம் (இவை ஈரோடு மாவட்டத்தில் இருந்தது) ஆகிய 6 தாலுகாக்களும் அடங்கும் எ‌ன்று அந்த அதில் கூறப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'வைகோவை கைது செய்ய முதலில் அறிக்கை விட்டவர் ஜெ.தான்'
30-ம் தேதி தேவர் நினைவிடத்தில் ஜெ. அஞ்சலி
அமீர் கைதை கண்டித்து உதவி இயக்குனர்கள் போராட்டம்
அமீர் கைதுக்கு திருமாவளவன் கண்டனம்
மத்திய அரசு மீதான நம்பிக்கை வீண் போகவில்லை: முதல்வர்
கடலூர்: பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...