|
| 30-ம் தேதி தேவர் நினைவிடத்தில் ஜெ. அஞ்சலி |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 25 அக்டோபர் 2008 ( 16:08 IST ) | |
முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை ஒட்டி வரும் 30-ஆம் தேதி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்துகிறார்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை ஒட்டி, வரும் 30- ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலரஞ்சலி செலுத்தவுள்ளார்.
இதன் பின்னர் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் பசும்பொன்னில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியையும் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
இதனை அடுத்து நடைபெறும் நிகழ்ச்சியில், தேவர் வாழ்க்கை வரலாறு அடங்கிய குறுந்தகட்டினையும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பாடல்கள் கொண்ட குறுந்தகட்டினையும் அவர் வெளியிடவுள்ளார்.
இவ்வாறு அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|