|
| அமீர் கைதுக்கு திருமாவளவன் கண்டனம் |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 25 அக்டோபர் 2008 ( 15:12 IST ) | |
திரைப்பட இயக்குனர்கள் அமீர், சீமான் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் கருத்துரிமை பறிக்கப்பட்டுள்ளதாக, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திரைப்பட இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோர் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நடவடிக்கை கருத்துரிமைப் பறிக்கும் அரசு வன்கொடுமை என்று குறிப்பிட்டுள்ள திருமாவளவன், தமிழினத்தின் பகைவர்கள் மேலும் துள்ளுவதற்கு கைது நடவடிக்கை இடம் கொடுக்கும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழினப் பகைவர்களின் துரோகக் குரலுக்குச் செவிமடுப்பதும், தமிழ் உணர்வாளர்களைக் கைது செய்வதும், தமிழின ஒருமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், தீபாவளியைத் தவிர்த்திட வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|