|
| மத்திய அரசு மீதான நம்பிக்கை வீண் போகவில்லை: முதல்வர் |
| சென்னை (ஏஜென்சி), 25 அக்டோபர் 2008 ( 14:11 IST ) | |
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு மீதான நம்பிக்கை வீண் போகவில்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதம்:
சிங்கள ராணுவம் பொழிகின்ற குண்டுகளால் தினம் தினம் அழிகின்றது தமிழ் இனம். அதிலிருந்து நம் இனத்தை மீட்க நாமெல்லாம் ஒன்று கூடி இந்தியப் பேரரசின் உதவியை நாடி நிற்கின்றோம்.
கடந்த 6ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த பிரச்சனையை உடனடியாக கவனிப்பதாக கூறினார். அன்று மாலையே, டெல்லியில் உள்ள இலங்கை தூதரிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, கடந்த 14ம் தேதி நடந்த அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். அதேநாளில் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் "இலங்கை பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. சமரச பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண வேண்டும். இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதும் சித்ரவதை செய்யப்படுவதும் வேதனை அளிக்கிறது'' என்று தெரிவித்தார்.
தமிழர்களின் துயரத்திலும், நாம் நிறைவேற்றிய தீர்மானத்திலும் இந்திய பிரதமர் எந்த அளவிற்கு ஈடுபாட்டோடும், நமக்கு ஆதரவாகவும் உள்ளார் என்பதை தெளிவாக்குகின்ற வார்த்தைகளாக அவரது பேட்டி அமைந்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், "பேச்சு வார்த்தை மூலமாக அரசியல் தீர்வு காண இந்தியா, தனது அதிகாரத்திற்கு உட்பட்டு எல்லா முயற்சிகளையும் எடுக்கும்" என்று அறிக்கையில் தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 18ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, கண்டனம் தெரிவித்துள்ளார்.
இவற்றுக்கெல்லாம் மேலாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த 22ம் தேதி நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக வைத்த அறிக்கையில் கீழ் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
"இலங்கையில் நடைபெறும் போரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து மத்திய அரசு பெரிதும் கவலை கொண்டுள்ளது. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அவர்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்.
இலங்கையிலே உள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நல்வாழ்வு குறித்து நமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சு நடத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகருமான பாசில் ராஜபக்சே விரைவில் இந்தியா வரவுள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக நடைமுறை தொடர இலங்கை அரசு எடுத்து வரும் முயற்சிகளை நாம் ஊக்குவிக்கிறோம்.
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு பிரணாப் முகர்ஜியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரதமரும், வெளிவிவகாரத் துறை அமைச்சரும் எடுத்துவரும் நடவடிக்கைகள் நமது வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இலங்கை தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டுகின்ற வகையிலும் அமைந்துள்ளதை அறிந்திட முடிகிறது.
இப்போது படிப்படியாக நிறைவேறி வருகிற தமிழக மக்களின் நீண்டகாலக் கனவு முழுமையாக நிறைவேறிட நாம் அறவழிச் செயல்முறைகளில் ஈடுபட வேண்டும். அதற்கான உந்து சக்திகளில் ஒன்று தான் நாம் மேற்கொண்ட மனிதச்சங்கிலி. இதில் இணைந்திட்ட நாம் இலங்கை தமிழரின் இன்னல் அறவே தீர்த்திடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|