யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கடலூர்: பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலி
கடலூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 25 அக்டோபர் 2008   ( 14:01 IST )
கடலூர் அருகே சாலையோரக் கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர்.

கடலூரில் இருந்து நேற்றிரவு அரசுப் பேருந்து ஒன்று சிதம்பரத்துக்குச் சென்று கொண்டிருந்தது. சங்கொலிக்குப்பம் என்ற இடத்தை நெருங்கிய போது பேருந்து எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த கார் மீது மோதியது.

அடுத்த சில வினாடிகளில் நிலை தடுமாறி மினி டெம்போ மீது மோதிய பேருந்து, அதே வேகத்தில் சாலையோரம் இருந்த 14 அடி கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பேருந்து சேதமடைந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூவர் உட்பட 5 பேர் இறந்தனர். பேருந்து பயணிகள் 40 பேர் உட்பட 44 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் புதுவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேருந்து கவிழ்ந்த கால்வாயில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் மீட்புப் பணிகள் தாமதப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சீமான், அமீருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
புதிய காற்றழுத்தம்: மழை தொடரும்
கைது நடவடிக்கை ஏன்? காவல்துறை விளக்கம்
விடுதலை செய்யும் வரை படப்பிடிப்பு இல்லை: பாரதிராஜா
கன மழை: சென்னையில் போக்குவரத்து நெரிசல்
இயக்குனர்கள் சீமான், அமீர் கைது: இன்று கோர்ட்டில் ஆஜர்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...