யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சீமான், அமீருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
ராமநாதபுரம்/ சென்னை (ஏஜென்சி), 25 அக்டோபர் 2008   ( 13:36 IST )
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்ட சீமான், அமீர் ஆகியோர், இன்று காலை பலத்த பாதுகாப்புடன் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நீதிபதி தங்கவேல் முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு நடந்த விசாரணைக்குப் பின் இருவரையும் வரும் நவம்பர் 9 ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிதிபதி உத்தரவிட்டார். இதன்படி இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

கடந்த 19 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழ் திரையுலகினர் சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக சீமான், அமீர் ஆகியோர் பேசியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புதிய காற்றழுத்தம்: மழை தொடரும்
கைது நடவடிக்கை ஏன்? காவல்துறை விளக்கம்
விடுதலை செய்யும் வரை படப்பிடிப்பு இல்லை: பாரதிராஜா
கன மழை: சென்னையில் போக்குவரத்து நெரிசல்
இயக்குனர்கள் சீமான், அமீர் கைது: இன்று கோர்ட்டில் ஆஜர்
செ‌ன்னை‌யி‌‌ல் மீண்டும் கனமழை!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...