|
| கைது நடவடிக்கை ஏன்? காவல்துறை விளக்கம் |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 25 அக்டோபர் 2008 ( 09:59 IST ) | |
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசியதால் தான் இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக, தமிழக காவல்துறை டி.ஜி.பி (சட்டம்- ஒழுங்கு) கே.பி. ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து கடந்த 19-ம் தேதி ராமேஸ்வரத்தில் `தமிழ் திரை உலக தமிழின உணர்வுக்குழு' சார்பில் கண்டனப் பேரணியும், பொதுக் கூட்டமும் நடந்தது.
அந்தக் கூட்டத்தில், திரைப்பட இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகவும், இந்திய அரசின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசினர்.
அவர்களின் பேச்சுக்கள் சட்ட விரோதமாக இருந்ததால், இது குறித்து கடந்த 24-ம் தேதி ராமநாதபுரம் குற்றப்புலனாய்வு காவல்துறை இ.பி.கோ. 124- ஏ (தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுமை வகையில் பேசுதல்), 153 (ஏ) (1) (பி) (பிரிவினைவாதத்தை தூண்டுதல்) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்பிரிவு 13 (1) (பி) ஆகியவற்றின் கீழ், அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இவ்வழக்கின் அடிப்படையில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கே.பி. ஜெயின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|