யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
விடுதலை செய்யும் வரை படப்பிடிப்பு இல்லை: பாரதிராஜா
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 25 அக்டோபர் 2008   ( 09:48 IST )
கைது செய்யப்பட்டுள்ள அமீர், சீமான் ஆகியோரை விடுதலை செய்யும் வரை தமிழ் உணர்வுள்ள இயக்குனர்கள் யாரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஆவேசமாக அளித்த பேட்டியில், 'இந்த இரண்டு பிள்ளைகளும் தமிழர்களுக்கு போராடினார்கள். தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தவிர அவர்கள் வேறுஎந்த தவறும் செய்யவில்லை' என்றார்.

'இயக்குனர்கள் சீமானும், அமீரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படும் வரை தமிழ் இன உணர்வு உள்ள இயக்குனர்கள் எவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள்' என்று பாரதிராஜா மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே அமீர், சீமான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோ அடுத்துள்ள காமராஜர் சிலை அருகே இன்று காலை 10 மணிக்கு திரை உலகப் பிரமுகர்கள், உதவி இயக்குனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கன மழை: சென்னையில் போக்குவரத்து நெரிசல்
இயக்குனர்கள் சீமான், அமீர் கைது: இன்று கோர்ட்டில் ஆஜர்
செ‌ன்னை‌யி‌‌ல் மீண்டும் கனமழை!
மனித‌ச் சங்கிலி: கருணா‌நி‌தி துவ‌‌க்‌கி வை‌த்தா‌ர்!
சென்னையில் ராஜீவ் சிலை உடைப்பு: பதற்றம்
விவசாய கடன் ரூ.196 கோடி த‌ள்ளுபடி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...