யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கன மழை: சென்னையில் போக்குவரத்து நெரிசல்
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 25 அக்டோபர் 2008   ( 09:34 IST )
கனமழை மற்றும் மனிதச் சங்கிலிப் பேரணியால் சென்னை நகரில் நேற்று வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளிப் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் பயணிகள் இதனால் கடும் அவதியுற்றனர்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னையில் நேற்று பிரம்மாண்ட மனிதச் சங்கிலிப் பேரணி நடைபெற்றது.

மற்றொரு புறம், நேற்று பிற்பகல் முதல் சென்னையில் கனமழை கொட்டி, நகரை வெள்ளக் காடாக்கியது. பேரணியும், மழையும் ஒன்று சேரக் கைகோர்த்ததால், நகரில் கடும் வாகனப் போக்குவரத்து நெரிசல் உண்டானது.

வெள்ளிக் கிழமை என்பதால் தீபாவளிப் பண்டிகைக்கு வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள், வாகன நெரிசலில் சிக்கி பெரும் அவதியுற்றனர். நகரின் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல சில இடங்களில் 3 மணி நேரத்திற்கும் மேல் ஆனது.

இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர்.

பல பயணிகள் தாங்கள் முன் பதிவு செய்திருந்த ரயிலில் செல்ல முடியாமல் திண்டாடினர். இதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் உரிய நேரத்தில் வந்து சேராததால், விடிய விடிய பயணிகள் காத்துக் கிடந்தனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இயக்குனர்கள் சீமான், அமீர் கைது: இன்று கோர்ட்டில் ஆஜர்
செ‌ன்னை‌யி‌‌ல் மீண்டும் கனமழை!
மனித‌ச் சங்கிலி: கருணா‌நி‌தி துவ‌‌க்‌கி வை‌த்தா‌ர்!
சென்னையில் ராஜீவ் சிலை உடைப்பு: பதற்றம்
விவசாய கடன் ரூ.196 கோடி த‌ள்ளுபடி
சென்னையில் பெரும் விமான விபத்து தவிர்ப்பு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...