|
| பிரிவினையை தூண்டியதாக வைகோ கைது |
| சென்னை (ஏஜென்சி), 23 அக்டோபர் 2008 ( 17:03 IST ) | |
பிரிவினையை தூண்டும் விதமாக பேசியதாக எழுந்த குற்றச்சாற்றின் பேரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அக்கட்சியின் பொருளாளர் கண்ணப்பனும் இன்று கைது செய்யப்பட்டனர்.
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக மதிமுக சார்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ,ஈழத்தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்தவும் தயார் என தெரிவித்திருந்தார்.
அக்கட்சியின் பொருளாளர் கண்ணப்பன் பேசுகையில், " இந்தியப் பிரதமரும், தமிழக முதல்வரும் நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்ற மாட்டார்கள்.விரைவில் தனி ஈழம் மலரும்.அது மட்டுமல்ல தனித் தமிழ்நாடும் உருவாகும்.தமிழ்நாடு தனி நாடு என்று சொல்லும் நாள் வரும் " என்று கூறியிருந்தார்.
வைகோ மற்றும் கண்ணப்பன் ஆகியோரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, பிரிவினையை தூண்டும் விதமாக பேசியதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தன.
இந்நிலையில் பிரிவினையை தூண்டும் விதமாக பேசிய குற்றச்சாற்றின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், வைகோவை அண்ணா நகரிலுள்ள அவரது வீட்டிற்கு சென்று இன்று கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வருகிற நவம்பர் மாதம் 6 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து வைகோ சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
இதனிடையே பொள்ளாச்சியிலுள்ள தனது பண்ணை வீட்டிலிருந்த மதிமுக பொருளாளர் கண்ணப்பனையும் இதே குற்றச்சாற்றுக்காக போலீசார் இன்று மாலை கைது செய்தனர்.
முன்னதாக வைகோவை கைது செய்யப்பட்டு சென்னை கடற்கரை சாலை காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக வைகோ கைது செய்யப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.கடந்த ஜெயலலிதா ஆட்சியில், புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக வைகோ உள்ளிட்ட அக்கட்சியினர் பலர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டது குறிபிடத்தக்கது.
அப்போது வைகோ கைதுக்கு இப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார்.ஆனால் இன்று அதே குற்றச்சாற்றுக்காக அவரது ஆட்சியிலேயே வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாளை நடைபெற உள்ள மனிதச் சங்கிலி போராட்டம்,வைகோவின் வைகோவின் கைதால் திசை திரும்பி,இந்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதில் தவறிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தற்பொழுதான் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டிருப்பது போன்ற ஒரு எண்ணம் அண்மையில் ஏற்பட்டிருந்தது.'
ஆனால் காங்கிரஸ் கட்சியினர், ஜெயலலிதா, ராமகோபாலன் மற்றும் பா.ஜனதா தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட சிலர் வைகோவை கண்டித்து விடுத்த அறிக்கையினால் எழுந்த நிர்ப்பந்தம் மற்றும் மத்திய ஆட்சித் தலைமையிலுள்ள காங்கிரஸின் அதிருப்திக்குள்ளாகிவிடக்கூடாது என்ற கருணாநிதியின் எண்ணம் ஆகியவையே வைகோவை இத்தனை அவசரமாக கைது செய்யும் சூழலை ஏற்படுத்தியதாக தமிழக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
" வைகோவின் பிரிவினைவாத பேச்சுக்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மத்திய அரசிடமிருந்து கேள்வி வந்துவிடக் கூடாது எனக் கருதி இந்த அளவுக்கு விரைந்து செயல்பட்ட தமிழக அரசு, ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசு எத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டது என்பதை கவனத்தில் கொள்ளாமல் போனது ஏன் ?
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது " கவலையளிப்பதாக உள்ளது ; வேதனையாக உள்ளது... " என்று வழா வழா... கொழா.. கொழா.. ரீதியில்தானே இலங்கை அதிபர் ராஜ பக்சேவிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
வைகோவை கைது செய்யப்படுவதில் காட்டப்படும் இந்த வேகம், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுப்பதில் காட்டப்படவில்லையே ? " என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|