|
| மதுரையில் ரயில் பெட்டிகள் எரிந்து சாம்பல் |
| மதுரை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2008 ( 14:59 IST ) | |
மதுரை ரயில் நிலையத்தில் இரண்டு ரயில் பெட்டிகள் எரிந்து நாசமாயின.இதன் பின்னணியில் விஷமிகள் உள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயிலின் கடைசி பெட்டியில் இருந்து உண்டான தீ, அடுத்த பெட்டிக்கும் மளமளவென்று பரவியது.
இதற்கிடையே தகவல் அறிந்து மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
தீயில் எரிந்த இரு பெட்டிகளும் பூட்டி, நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்காது என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் விஷமிகள் உள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|