|
| ரயில் மறியலில் ஈடுபட்ட திருமாவளவன் கைது |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2008 ( 11:20 IST ) | |
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் இன்று கைது செய்யப்பட்டார்.
இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் நுழைய முயன்றார் திருமாவளவன். அவரை காவல்துறையினர் தடுக்க முற்பட்டனர்.
இதையடுத்து பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்கும், சென்ட்ரல் ரயில் நிலைய பணிமனைக்கும் இடைப்பட்ட பகுதியில், தண்டவாளத்தின் குறுக்கே அமர்ந்து திருமாவளவன் மறியல் செய்தார்.
இலங்கை அதிபருக்கு எதிராகவும், அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராகவும் மறியல் செய்தவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து திருமாவளவன் உட்பட மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தால் சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மின்சார ரயில் சேவையும் சிறிது நேரத்திற்கு பாதிக்கப்பட்டது.
இதேபோல் தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|