யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தனித்தமிழ்நாடு: கண்ணப்பன் பேச்சுக்கு கண்டனம்
சென்னை (ஏஜென்சி), 23 அக்டோபர் 2008   ( 11:07 IST )
விரைவில் தனி ஈழமும், தனித் தமிழ்நாடு அமையும் என்று மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் கூறியுள்ள கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக மதிமுக சார்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது.

வைகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், தனித் தமிழ்நாடு பற்றி மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் பேசிய கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.

இது தொடர்பாக கண்ணப்பன் பேசுகையில், 'இந்தியப் பிரதமரும், தமிழக முதல்வரும் நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்ற மாட்டார்கள். எல்டிடிஈ- யினர் மீதான தடையை நீக்க வேண்டும்' என்றார்.

'விரைவில் தனி ஈழம் மலரும். அதுமட்டுமல்ல தனித் தமிழ்நாடும் உருவாகும். தமிழ்நாடு தனி நாடு என்று சொல்லும் நாள் வரும்' என்றும் அவர் கூறினார்.

அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் டி. சுதர்சனம் கூறுகையில், 'இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில், விடுதலைப் புலிகளையும் ஆதரித்து பேசுவோர் மீதும், தனித் தமிழ்நாடு கோரிக்கை விடுப்பவர்கள் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறுகையில், இலங்கை விவகாரத்தை பயன்படுத்தி தனித் தமிழ்நாடு கோரிக்கையை முன் வைத்திருப்பதை மார்க்சிஸ்ட் ஏற்கவில்லை. இத்தகைய போக்கு கவலை அளிக்கிறது' என்றார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரயில் மறியலில் ஈடுபட்ட திருமாவளவன் கைது
மழை பாதிப்பு: அரசு நிவாரணம் அறிவிப்பு
கன மழை: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
ஆட்டோ ரிக் ஷாவுக்கு திரவ எரிவாயு : தமிழக அரசு உத்தரவு
புலிகள் ஆதரவுப் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு
2009-ல் 18 வயது நிரம்புபவர்களுக்கும் வாக்குரிமை : நரேஷ்குப்தா
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...