|
| கன மழை: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
|
| சென்னை (ஏஜென்சி), 23 அக்டோபர் 2008 ( 09:36 IST ) | |
தமிழத்தில் தற்போது பெய்து வரும் கன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளக்காடாக மிதக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மழைக்கு தமிழகத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, குமரி மாவட்டங்களில் தலா 2 பேர், நெல்லை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் தலா ஒருவர் என ஆறு பேர் மழைக்கு பலியாகியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழைக்கு பலியானவர்களையும் சேர்த்து இதுவரை மொத்த 13 பேர் மழைக்கு இறந்துள்ளனர். இது தவிர தமிழகம் முழுவதும் 398 வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 500 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
சென்னை நகரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது. கன மழை காரணமாக நகரில் கடும் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை உட்பட பெரும்பாலான மாவட்டங்கள் தற்போதைய மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் 700 ஹெக்டேர் நிலத்தில் குறுவை நெல் பயிர்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை- வெள்ள பாதிப்புகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|