யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஆட்டோ ரிக் ஷாவுக்கு திரவ எரிவாயு : தமிழக அரசு உத்தரவு
சென்னை(ஏஜென்சி), புதன்கிழமை, 22 அக்டோபர் 2008   ( 18:47 IST )
வாகன பெருக்கத்தால் ஏற்படும் மாசினை தவிர்க்க பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் ட்டோ ரிக் ஷாக்களை திரவ எரிவாயு மூலம் இயக்க மாற்றம் செய்ய வேண்டும் என்று மிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

" பெருகி வரும் வாகன பெருக்கத்தால் ஏற்படும் மாசினை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சென்னை மாநகரில் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் 33731 ஆட்டோ ரிக் ஷாக்களை படிப்படியாக திரவ எரிவாயு மூலம் இயங்க அரசு ஆணை பிறப்பித்து அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக ஆட்டோ ஒன்றிற்கு ரூ. 2000 மானியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 4971 ஆட்டோக்கள் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.இந்த மானியத்தினை உயர்த்தி அளிக்க பல்வேறு சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையினை ஏற்று மீதமுள்ள 28760 ஆட்டோக்களை திரவ வாயு எரிபொருள் மூலம் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றம் செய்ய மானிய தொகை ரூ. 2000ஐ ரூ. 3000 ஆக உயர்த்தபட்டுள்ளது.

எனவே, ஆட்டோ ரிக் ஷா உரிமையாளர்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி பெட்ரோலில் இயங்கும் ஆட்டோ ரிக் ஷாக்களை திரவ வாயு எரிபொருள் மூலம் இயங்கும் ஆட்டோ ரிக் ஷாக்களாக மாற்றம் செய்து சூழல் மாசுபடுவதை தவிர்த்து உலக ஆரோக்கியத்தினை வளர்க்க உதவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் " என அதில் கூறப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புலிகள் ஆதரவுப் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு
2009-ல் 18 வயது நிரம்புபவர்களுக்கும் வாக்குரிமை : நரேஷ்குப்தா
தூத்துக்குடியில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெ.
கனமழை: 3 மாவட்டப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
மழை பெய்தாலும் மனிதச் சங்கிலியில் பங்கேற்போம்: கருணாநிதி
மின் கட்டண உயர்வு ரத்து
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...