|
| புலிகள் ஆதரவுப் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு |
| சென்னை(ஏஜென்சி), புதன்கிழமை, 22 அக்டோபர் 2008 ( 18:34 IST ) | |
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக சட்டசபை வளாகத்திலுள்ள காங்கிரஸ் தலைவர் அலுவலகத்தில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட கூட்டம் இன்று நடைபெற்றது.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், டாக்டர் விஜயகுமார், அருள் அன்பரசு, ஜான் ஜேக்கப், வேல்துரை, அசன்அலி, சுப்ராம், சிவராஜ், பழனிச்சாமி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர்,சமீப நாட்களாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பதாக குற்றம் சாற்றினர்.
விடுதலைப் புலிகளை ஆதரிப்போம் என்று பேசிய வைகோ, நெடுமாறன் ஆகியோர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்ட நிலையில்,இப்போது வெளிப்படையாகவே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், பிரபாகரனுக்கு ஆதரவாகவும் அவர்கள் பேசுவதாகவும், இதை எப்படி தமிழக அரசு அனுமதிக்கிறது என்றும் அவர்கள் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் புலிகளை ஆதரித்துப் பேசியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அவர்களை சுதர்சனம் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில், கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதர்சனம்,இன்று நடைபெற்ற கூட்டம் முறையான எம்.எல்.ஏக்கள் கூட்டமல்ல என்றும்,வெகு விரைவில் அக்கூட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.
மேலும் இன்றைய கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததாகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|