யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
2009-ல் 18 வயது நிரம்புபவர்களுக்கும் வாக்குரிமை : நரேஷ்குப்தா
மதுரை (ஏஜென்சி), புதன்கிழமை, 22 அக்டோபர் 2008   ( 18:30 IST )
வரும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தி செய்பவர்கள் வரும் தேர்தல்களில் வாக்களிக்கலாம். அதற்கேற்ப வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.

தொகுதி மறு சீரமைக்கும் பணி முடிந்துள்ள நிலையில், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய கள ஆய்வுப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மதுரையில் இன்று நடைபெற்றது.

தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல்,விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் நரேஷ் குப்தா கூறியதாவது:

தொகுதி மறு சீரமைப்புக்கு பின் மாவட்ட வாரியாக தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது. சென்னை, கோவையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கள ஆய்வுப் பணிகள் முடிவடைந்ததும் இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்கும் பணி மீண்டும் நடைபெறும். வரும் 1.1.2009 அன்று 18 வயது எட்டுபவர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். எதிர் வரும் தேர்தலில் இவர்களும் வாக்களிக்கலாம்.

இதற்கான பணிகள் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கும். நவம்பர் 24 ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். 2009 ஜனவரி 10 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.

இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தூத்துக்குடியில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெ.
கனமழை: 3 மாவட்டப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
மழை பெய்தாலும் மனிதச் சங்கிலியில் பங்கேற்போம்: கருணாநிதி
மின் கட்டண உயர்வு ரத்து
தொடர்மழை: தத்தளிக்கும் சென்னை!
புதுவை சட்டசபைக்குள் நுழைய மாணவர்கள் முயற்சி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...