யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அனைத்துக் கட்சி கூட்டம் : திருமாவளவன் வேண்டுகோள்
சென்னை(ஏஜென்சி), 12 அக்டோபர் 2008   ( 17:28 IST )
இலங்கை தமிழர் பிரச்சனைக்காக கருணாநிதி கூட்டியுள்ள னைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் கருணாநிதி வரும் 14 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதென அறிவிப்பு செய்துள்ளது போற்றுதலுக்குரியதாகும்.

இக்கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதும் இதனைக் கண் துடைப்பு நாடகமென விமர்சிப்பதும் துளியளவும் ஈழத் தமிழர்களுக்கு பயனளிப்பதாக அமையாது.

எனவே, ஈழத் தமிழர் நலன் கருதியேனும் கட்சி அரசியல் நலன் களை புறந்தள்ளிவிட்டு ஒன்றுபட்டு குரலெழுப்ப முன்வர வேண்டுமென அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை மனித நேய அடிப்படையில் விடு தலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது.

மேலும் ஈழத் தமிழினத்தை பாதுகாக்கும் உணர்வோடு த.வெள்ளையன் தலைமை யிலான வணிகர் சங்க கூட்டமைப்பு வரும் 17 அன்று தமிழகம் தழுவிய அளவில் கடையடைப்பு அறப்போர் நடத்த அழைப்பு விடுத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.

வணிகப் பெருமக்களின் தமிழ்மான உணர்வை விடுதலைச் சிறுத்தைகள் மனமார வரவேற்றுப் பாராட்டுகிறது. இந்தியப் பேரரசை தலையிட வைத்து இனப் படுகொலையைத்தடுத்து நிறுத்திட வணிகர்களின் இந்த கடை யடைப்பு அறப்போரை ஒட்டு மொத்தத் தமிழர்களும் ஒத்துழைத்து வெற்றிபெற வைப்பது மிக மிக இன்றியமையாததென விடுதலைச் சிறுத்தைகள் உணர்கிறது என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் திருமாவளவன்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அனைத்துக் கட்சிக் கூட்டம் : பா.ஜனதா புறக்கணிப்பு
காற்றழுத்த தாழ்வு நிலை ; சென்னையில் மழை நீடிக்கும்
இலங்கை பிரச்சினை :அனைத்து கட்சி தலைவர்களுக்கு‌ கருணாநிதி கடிதம்
ஆயுள் கைதிகள் விடுதலை சட்ட விரோதம் : ஜெ.
'ஸ்பெக்ட்ரம்' ஊழலில் கனிமொழிக்கு தொடர்பு : சுப்பிரமணியசாமி
இலங்கை தமிழர் பிரச்சனை : காங். வேண்டுகோள்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...