|
| அனைத்துக் கட்சிக் கூட்டம் : பா.ஜனதா புறக்கணிப்பு |
| சென்னை(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2008 ( 17:24 IST ) | |
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக தமிழக பா.ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இலங்கை ராணுவத்துக்குத் துணைபோகும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக, இது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.
தனக்கு உள்ள அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மத்திய அரசு உடனடியாக தனது கடமையை செய்யும்படி வலியுறுத்துவதை விட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் மூலம் எந்த தீர்மானம் நிறைவேறினாலும் அது இலங்கை வாழ் தமிழர்களுக்கு எந்தவித நன்மையோ தமிழ் மக்களை திருப்திபடுத்துவதாகவோ அமையப் போவதில்லை.
இலங்கை வாழ் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் பா.ஜனதா உறுதியுடன் தொடர்ந்து குரல் கொடுக்கும்.
இருந்தாலும் செயல்படாத மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசு கூட்டும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என மாநில பா.ஜனதா உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அதிமுகவும், அதனுடைய கூட்டணிக் கட்சியான மதிமுகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|