|
| காற்றழுத்த தாழ்வு நிலை ; சென்னையில் மழை நீடிக்கும் |
| சென்னை(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2008 ( 16:58 IST ) | |
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு முக்கியமான வடகிழக்கு பருவ மழை இன்னும் தொடங்கவில்லை என்ற போதிலும், வங்கக் கடலில், இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக எனினும், கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கு நல்ல மழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவிலிருந்து விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் தொடங்கிய மழை இரவில் கனமழையாக மாறி கொட்டி தீர்த்தது.
இந்நிலையில், இன்று காலையிலும் 10 மணியளவில் பலத்த மழை பெய்தது.இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில் மழை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.மேலும், நேற்றிரவு முதல் பெய்து வரும் மழைக்கு வடகிழக்கு பருவ மழை காரணம் அல்ல என்றும் தென்மேற்கு பருவ மழையே பெய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|