|
| இலங்கை பிரச்சினை :அனைத்து கட்சி தலைவர்களுக்கு கருணாநிதி கடிதம் |
| சென்னை( ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2008 ( 13:44 IST ) | |
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆலோசிப்பதற்காக வரும் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
" இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழகத்து அரசியல் இயக்கங்களும், அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியதின் காரணமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்து விரைப்படுத்திடவும், நிலையான அமைதி அங்கே உருவாகிட தக்க முயற்சிகளை மேற்கொள்ளவும், அங்கே இனப்படுகொலையும், போரும் அல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மத்திய அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்ள,
தமிழக அரசின் சார்பில் அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் ஒன்று, வரும் அக்டோபர் 14ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெறவிருப்பதால், தாங்கள் இந்த அழைப்பை ஏற்று, தவறாது அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்" என்று அந்த கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|