யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
'ஸ்பெக்ட்ரம்' ஊழலில் கனிமொழிக்கு தொடர்பு : சுப்பிரமணியசாமி
சென்னை(ஏஜென்சி), சனிக்கிழமை, 11 அக்டோபர் 2008   ( 18:28 IST )
'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் லைவரிசை ஒதுக்கீடு முறைகேட்டில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், எம்.பியுமான கனிமொழி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:

மத்திய அரசின் தொலைத் தொடர்பு துறையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு காரணமாக மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுள்ள ஸ்வான் என்ற நிறுவனம் தொலைத் தொடர்பு துறையில் இல்லாத ஒரு நிறுவனமாகும்.

மும்பையைச் சேர்ந்த இந்த நிறுவனம் ஸ்பெக்ட்ரம் உரிமைகளை வாங்கிய பிறகு பாதி பங்குகளை அபுதாபியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்றுள்ளது.

இந்த முறைகேட்டில் மத்திய அமைச்சர் ராசா, தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 2 பேருக்கு தொடர்பு உள்ளது.எனவே இது குறித்தும் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஸ்வான் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் உரிமத்தை பிரதமர் மன்மோகன்சிங் ரத்து செய்ய வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலையில் முக்கிய குற்றவாளியான விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.அதன் பிறகே மத்திய அரசு இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காணவும், அமைதி திரும்பவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஒரிசா மாநிலத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஸ்வாமி லஷ்மணானந்தா கொலை செய்யப்பட்டதில் கத்தோலிக்க கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு தொடர்பு உள்ளது.

கடந்த மே மாதம் கிறிஸ்தவ மிஷனரி ஒன்றின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மிஷனரிகளின் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கும் லஷ்மணானந்தாவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரிசாவில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அம்மாநில அரசை கலைக்கவும்,பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டது.அதற்குள் மிஷனரிகளின் இந்த தீர்மானம் குறித்து உளவு துறையின் மூலம் தகவல்கள் கிடைத்ததால்தான் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

எனவே லஷ்மணானந்தா கொலையில் மிஷனரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றார் சாமி.





(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கை தமிழர் பிரச்சனை : காங். வேண்டுகோள்
தீபாவளி : தி.நகரில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு
அக்.13ல் மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெ.
டீசல் மீதான வாட் வரி வாபஸ்: முதல்வர் உத்தரவு
இலங்கை பிரச்சனை: அக். 17ல் கடையடைப்பு!
என்எல்சி ஊழியர் ஸ்டிரைக் வாபஸ்: பேச்சு நீடிப்பு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...