யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இலங்கை தமிழர் பிரச்சனை : காங். வேண்டுகோள்
சென்னை(ஏஜென்சி), 11 அக்டோபர் 2008   ( 17:56 IST )
இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒவ்வொரு கட்சியும் தனித் தனியாக போராட்டம் நடத்தி விளம்பரம் தேட முயற்சிக்காமல் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையிலுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு கூறியதாவது :

வரும் 14ந் தேதி இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து சர்வகட்சி கூட்டம் நடைபெற உள்ளதை
நான் வரவேற்கிறேன்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வேன்.

அதிமுகவும், மதிமுகவும் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன.ஒவ்வொரு கட்சியும் தனித் தனியாக போராட்டம் நடத்தி விளம்பரம் தேட முயற்சிக்காமல் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.அப்போதுதான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசுக்கு தற்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ராணுவ உதவி செய்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளதைப் பற்றி கேட்கப்படுகிறது.

இலங்கைத் தமிழர்களுக்காக எங்கள் தலைவர் ராஜீவ்காந்தியையே நாங்கள் இழந்துள்ளோம். இன்றைக்கு இலங்கை யில் தமிழினம் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்.

வைகோவின் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானதுதனிப்பட்ட கட்சிகள் இந்த விஷயத்தில் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன.அந்த முயற்சிகள் முறியடிக்கப்படும்

இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்யவில்லை.இலங்கைக்கு சீனா தான் ஆயுதங்களை வழங்கியுள்ளது.இலங்கைக்கு அருகே இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு உள்ளது.

ஏதாவது விபரீதம் என்றால் உடனடியாக பாதிப்புக்குள்ளாவது நம்நாடுதான்.எனவே இந்தியர்களையும், இலங்கைத்தமிழர்களையும் காக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும். அதனை மத்திய அரசு சரியாக செய்து வருகிறது என்று தெரிவித்தார் தங்கபாலு.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தீபாவளி : தி.நகரில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு
அக்.13ல் மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெ.
டீசல் மீதான வாட் வரி வாபஸ்: முதல்வர் உத்தரவு
இலங்கை பிரச்சனை: அக். 17ல் கடையடைப்பு!
என்எல்சி ஊழியர் ஸ்டிரைக் வாபஸ்: பேச்சு நீடிப்பு!
அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு: ராசா மறுப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...