|
| தீபாவளி : தி.நகரில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு |
| சென்னை(ஏஜென்சி), சனிக்கிழமை, 11 அக்டோபர் 2008 ( 17:47 IST ) | |
தீபாவளி நெருங்குவதையொட்டி,தியாகராய நகருக்கு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்க வரும் பொதுமக்களை திருடர்களிடமிருந்து காப்பாற்ற உதவும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.நகர் பகுதியில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுபவர்களை பிடிப்பதற்காக தி.நகர் ரெங்கநாதன் தெரு உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 16 கண்காணிப்பு கேமராக்களை இன்று துவக்கி வைத்த போலீஸ் கமிஷனர் ஆர். சேகர், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தி.நகர் பகுதி முழுவதும் தீபாவளி திருட்டுகளை தடுப்பதற்காகவும், பொதுமக்களுக்கு உதவுவதற்காகவும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்களை தவிர, மேலும் 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அவற்றிலிருந்தும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள்.அத்துடன் 18 போலீசார் கூட்டத்தில் ஊடுருவி முக்கிய இடங்களில் இருந்து கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு செய்வார்கள்.
இவை தவிர கண்காணிப்பு கேமிராக்களின் கட்டுப்பாடு அமைக்கப்பட்டுள்ள தி.நகர் துணைக் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்.
ஜேப்படி திருடர்கள், வாகனத் திருடர்கள் அடங்கிய போஸ்டர்களும் பல்வேறு இடங்களில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளன. கடைகளிலும் இவை வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாதுகாப்பாக கடைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு உதவுவதற்காக தி.நகர் பகுதியில் 2 ஆம்புலன்ஸ் வண்டிகளும், 3 தீயணைப்பு வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கு 8 குடிநீர் தொட்டிகளும் வைக்கப் பட்டுள்ளன.
வாகனங்களை நிறுத்துவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|