|
| அக்.13ல் மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெ. |
| சென்னை (ஏஜென்சி), 11 அக்டோபர் 2008 ( 16:27 IST ) | |
மதுரை மாநகராட்சியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து வரும் 13ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சீர்கேடுகளைச் சந்தித்து வருகிறது. கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் தலையீடு காரணமாக, மதுரையில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.
மாநகராட்சியின் அடிப்படை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். ஒப்பந்ததாரர் மாநகராட்சி துணை மேயரின் பினாமி என்றும், பணியாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளத்தின் ஒரு பகுதியை அவர் எடுத்துக் கொள்கிறார் என்றும், திமுகவைச் சேர்ந்த ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைக்கு செல்லாமலேயே சம்பளம் பெறுகின்றனர் என்றும், இவ்வாறு ஒப்பந்ததாரரால் கொள்ளை அடிக்கப்௦படும் பணம் மு.க.அழகிரிக்குச் செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மு.க.அழகிரி கைகாட்டும் நபர்களுக்கே அனைத்து ஒப்பந்தங்களும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் வருவாயைப் பெருக்கவேண்டிய வகைகளில் வருவாயைப் பெருக்குவதை விடுத்து, சொத்து வரி, வணிக வரி, தொழிற்சாலை வரி ஆகியவற்றை உயர்த்தி மக்கள் மீது நிதிச்சுமையை சுமத்தி உள்ளனர். காலி இடங்களுக்கு தகுதியான அதிகாரிகள் நியமிக்கப்படாததால் மாநகராட்சிப் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுத் தொல்லை, சுகாதாரச் சீர்கேடு மற்றும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதை நிறைவேற்றாமல் மதுரை மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது.
இந்த நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், இதற்கு உறுதுணையாக இருக்கும் திமுக அரசைக் கண்டித்தும், கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் அராஜகப் போக்கைக் கண்டித்தும், வரும் 13ம் தேதி மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|