|
| டீசல் மீதான வாட் வரி வாபஸ்: முதல்வர் உத்தரவு |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 11 அக்டோபர் 2008 ( 16:12 IST ) | |
பெரிய தொழிற்சாலைகள் ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்து கொள்ளும் வகையில், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை (வாட் வரியை) திருப்பி அளிக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாலை நேரங்களில் 6 மணி முதல் இரவு 10 மணி வரை வீடுகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வகை செய்யும் வகையில், இந்த நேரங்களில் பெரிய தொழிற்சாலைகள் தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பெருந்தொழிற் சாலைகளின் உற்பத்தி பாதிக்காத வகையில், அவர்கள் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்துகொள்ள ஏதுவாக, தேவையான டீசல் வழங்குவது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன் காரணமாக, தொழிற்சாலைகளுக்குத் தேவையான கூடுதல் டீசலை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வழங்க மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. தற்போது பெட்ரோல் பங்குகளில் விற்கப்படும் டீசலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.37.13 என்று உள்ள நிலையில், மதிப்புக் கூட்டு வரியும் சேர்த்து லிட்டர் ஒன்றுக்கு சுமார் 50 ரூபாய் ஆகிறது.
இதனால், ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், டீசலின் மீதான மதிப்புக்கூட்டு வரியை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் திருப்பியளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|