|
| இலங்கை பிரச்சனை: அக். 17ல் கடையடைப்பு! |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 11 அக்டோபர் 2008 ( 10:25 IST ) | |
இலங்கை இனப்படுகொலையை கண்டித்து வரும் வரும் 17ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈழத் தமிழ் மண்ணில் இலங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்தும், இதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை கடற்படைக்கு பாடம் புகட்டக்கோரியும் வரும் 17ம் தேதி மாநிலம் முழுவதும் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரு வணிகர்கள் முதல் சிறு வணிகர்கள் வரை அனைவரும் அதில் பங்கேற்பர். தமிழ் மக்களின் உயிரோடும், உணர்வோடும் தொடர்புடைய போராட்டம் என்பதால் இந்த கடையடைப்பு போராட்டத்தில் இருந்து எந்த வர்த்தகப் பிரிவுக்கும் விதிவிலக்கு கிடையாது.
மிக சிறிய டீக்கடை முதல் மிகப்பெரிய நகைக்கடைகள் வரை, அனைத்து கடைகளையும் அடைத்து தமிழர்களின் உணர்வை வணிகர்கள் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|